பிணங்கள் பேசுமா?

 


பிணங்கள் பேசுமா?


இனம் விடுதலை

தியாகம் நன்றி

எனும் உணர்வுகளை

நெஞ்சிலேற்றி

இற்றைவரையும்

இவ்வுலகில் நீதிக்காய் போராடுகிறார்!


இங்கே

போராடுபவர் 

ஒவ்வொருவருக்கும்

குடும்பம் குழந்தைகள்

எல்லாம்

சுற்றவர இருந்தும்

உயிர் விட்டவருக்காய்

உடலை வருத்தி

தங்கள் நேரத்தை செலுத்தி

போராடுகிறார்!


ஆனால்

இனத்திற்காக

போராடவும்

துணிவில்லை

ஒரு துளி நேரத்தை

விடவும் வக்கில்லை

போராடுபவனை

வாழ்த்தவும்

மனமில்லை

மாறாக

அழுக்கு மூட்டைகளை

அவிழ்த்து கொட்டுவதில் மட்டும்

சில கேடு கெட்டதுகளின் நிலைப்பாடு!


தேசியம்

முகநூலில் மட்டும்

உலாவும்

அகத்திலே புறந்தள்ளிய

துர்நாற்றமே வீசும்!


கருக்கு மட்டைகளாய்

காலில் மிதிபடாது

நேருக்கு நேர் நின்று

முகம் காட்டி

போராடப் பழகு

அப்போது தெரியும்

யார் கோழை

யாருக்கு முதுகு கூனென்று!


ஒழிந்து நின்று

ஓலமிடுவதில்

அர்தமில்லை!

நீர் குமிழியாய்

வந்து போவதிலும்

பயனில்லை!


தன்னினத்தின்

சுய கௌரவத்திற்காக

சுயமரியாதையோடு

போராட முற்படாதவன்

பிணத்திற்கு ஒப்பானவன்!


உன்

குடும்பத்திற்காக

மட்டும் போராடுகின்றாயா

அதோடு நிறுத்திக்கொள்!


இனம் பற்றிப் பேச

நீ

தகுதியற்றவன்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.