ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் - யாழில் சம்பவம்!!

 


யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியொன்றில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது இன்று (24) மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.


முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாமையே தொடர்ச்சியாக ஆசிரியர் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.