“பன்னாட்டுக்_குற்றங்கள்”


அண்மையில் பேசுபொருளாக்கப்பட்ட, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை என்ற அமெரிக்க காங்கிரசுக்கு கொண்டுவந்த தீர்மானம், சில தாக்கங்களை உண்டாக்கியிருக்கிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடாவும், தமிழ் இனப்படுகொலையை, சுட்டிக்காட்டியுள்ளது. அதன் தலைவரும், (ஜஸ்டின் ரூடோ) அவர்களும் பிரதான எதிர்க்கட்சி (பழமைவாத கட்சி ) தலைவரும், காட்டமான அறிக்கை விட்டிருந்தனர்,. இதேபோல இங்கிலாந்து தேசத்திலும் பாராளுமண்டத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டுசெல்ல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவேண்டும் என்ற குரல்கள் ஓங்கத்தொடங்கியுள்ளன.

நானும் எனது பதிவுகளில் அதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த நேரத்தில், இதன் சாத்தியம்பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய “#பன்னாட்டுக்_குற்றங்கள்” எனும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் இனப்படுகொலை எவ்வளவு ஆழமானது என நாமறிவோம். மக்கள் இதுபற்றிய தெளிவுகொண்டிருப்பதும், அந்தந்த துறைசார் மக்களும் இதனை சர்வதேசமட்டத்துக்கு எடுத்துக்கொண்டுசெல்வதை , நானும் என் இனம்சார்ந்துஉங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எம் ஒவ்வொருவருக்கும், இதைப்பற்றிய அறிவு கட்டாயமாகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.