கொங்கோவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 176 பேர் உயிரிழப்பு!


கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி 176 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கிவு மாகாணத்தில் பெய்த மழையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இறந்தவர்களை நினைவு கூறும்முகமாக திங்கட்கிழமை நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.