யாழ்-தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக பாரிய மரம் முறிவு!


யாழ்-தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக பாரிய மரம் முறிவு | பிறவுன்   வீதிக் கூடான போக்குவரத்து முற்றாக தடை  செய்யப்பட்டுள்ளது.


*யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் விழுந்த பாரிய மரத்தினை வெட்டி அகற்றுகின்ற  பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.*  


*குறித்த    அனர்த்தத்தினால்.   தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக உள்ள  பிறவுன்   வீதிக் கூடான போக்குவரத்து முற்றாக தடை  செய்யப்பட்டுள்ளதுடன் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.*


*வீதி ஓரங்களில் தண்ணீர்  குழாய்களினை   பொருத்தும்  செயல் திட்டத்தின் போது குறித்த மரத்தின்  ஒரு பக்க  வேர்கள்  அனைத்தும் வெட்டப்பட்டதாக  அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டுகின்றார்கள் .*


*அத்துடன்  குறித்த மரத்திற்கு அருகில் உள்ள  மூன்று பெரிய மரங்களின்  வேர்களும்  இவ்வாறு வெட்டப்பட்டதாகவும்  அவ் மரங்களும்  எதிர்காலத்தில் விழக்கூடிய சாத்திய கூறுகள்   இருக்கின்றது  ஏனெனில்  அவ் மூன்று மரங்களில் ஒரு மரம்  தற்போது சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.