உலக சிலம்பம் சாம்பியன்ஸிப் போட்டியில் மலையக வீரர்களால் இலங்கைக்கு இரண்டாம் இடம்!


மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.19.05.2023.


உலக சிலம்பம் சாம்பியன்ஸிப் போட்டி இந்தியாவில் பெங்களூரில் உள்ள கோமங்களம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.


இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இடம்பெற்ற இப்போட்டியில் இந்தியா, இலங்கை, சுவீச்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குப் பற்றினார்கள்.


சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு,வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.


இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன், ராம்குமார், தினேஸ்குமார் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


இப் போட்டியில் ஹட்டன் ஹைலெவல் தனியார் கல்லூரியில் தரம் 6 யில் கல்வி பயிலும் மஸ்கெலியா லக்க்ஷபான தோட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் தீபா தம்பதிகளின் புதல்வன் ஜஸ்வின் சிலம்பு அடி போட்டியில் முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை யும் சிலம்பு சுற்றல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று புரவுன் பதக்கத்தை பெற்று அவர் கல்வி பயிலும் பாடசாலைக்கும், அவரது பெற்றோருக்கும் புகழைப் பெற்று கொடுத்து உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.