ஶ்ரீநவதுர்கா தேவி ஆலய இரதோற்சவ நிகழ்வு 20-5-2023 சனிக்கிழமை கவிவணக்கம்!

 


ஜேர்மனி வூப்பெற்றா அருள்மிகு ஶ்ரீநவதுர்கா தேவி ஆலய இரதோற்சவ நிகழ்வு 20-5-2023 சனிக்கிழமை 

கவிவணக்கம் 


எண்சீர் பொழிப்புமோனை விருத்தம்

———-


சீர்பதியாம் வூப்பற்றா சிறந்தநெறி காட்டச்         

சிந்தனையில் நாடோறும் திழைத்தோங்கி வருவாள் 

ஜேர்மணியில் நிலைத்தவளே ஜெகம்யாவும் காத்து 

ஜெயித்திடவே சிங்கமீதில் ஜெயவீரங் காண்பாய் 

நேர்கொண்டு பாற்குடங்கள் நிறைகற்பூ ரங்கள் 

நித்தமுனை வழிபடுவோம் நெஞ்சத்தால் போற்றி 

தேர்கொண்டு தெருவெல்லாம் சிறப்புவலம் வருவாய் 

தேவியுனைச் சரணடைந்தோம் திருவருளால் தானே/  


உலகாளும் அன்னையிவள் உள்ளத்தில் நின்று உருவாகி வருகின்றாள் உணர்ந்திடுவோம் இன்று 

விலகாது நிறைந்திடுவாள் விரும்பிடவே என்றும் வினைதீர அருள்தருவாள் விழியழகுத் தாயே

பலவாறு போற்றிநிதம் பாரினிலே பக்தர் பணிந்தேத்தி மகிழ்வாராம் பணிவுடனே நாளும் நலம்யாவும் தந்திடுவாள் நவதுர்க்கா தேவி நாடிவூப்பற் றாபதியில் நாபோற்று வோமே/                                      


கவிஞர் கலாநிதி சிவஶ்ரீ பா.இந்திரக்குருக்கள் சிட்னி அவுஸ்திரேலியாகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.