11 ஆண்டுகளாகியும் அந்த மண்ணில் இருக்கும் இனப்படுகொலையின் எச்சம்!


 இடப்பெயர்வின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் அமைத்து கொண்ட கிணறு இது .  


முள்ளிவாய்க்காலின் கடற்கரையை அண்டிய பிரதேசம் மணல் திட்டுக்களால் ஆன மண் நிரம்பிய இடம் குழி தோண்டினால் உடனேயே மூடி விடும் மணல் ஆகையால் கூரை தகரங்களை வளைத்து குழியை தோண்டி அதற்குள் மண் மூடி தூர்ந்து போகாதவாறு அணைத்து கிணறு அமைத்தோம் நீர் 5 -10 அடிகள் ஆழத்தில் கிடைத்துவிடும் . 


அவ்வாறு அமைக்க பட்ட கிணறு ஒன்று போர் உச்சம் பெற்ற நாட்களில் துப்பாக்கி சன்னங்களாலும் குண்டு சிதறல்களாலும் சல்லடை இடப்பட்டிருக்கும் தோற்றம் இது 11 ஆண்டுகளாகியும் அந்த மண்ணில் இருக்கும் இனப்படுகொலையின் எச்சம்


- குமணன் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.