மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார்!


மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார்.அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறலாமென சொல்லப்படுகிறது.


எவ்வாறாயினும், இந்த தகவலை ஆளுங்கட்சி பக்கம் உறுதி செய்ய முடியவில்லை.*


*மஹிந்த மீண்டும் பிரதமராவதை பெசில் மற்றும் நாமல் விரும்பவில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரே அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிந்தது.*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.