நடிப்பு - கட்டுரை!!

 


நடிப்பு இதை பலர் கலையாக, தொழில், வியாபாரம் எனக் கொண்டு சிறப்பாக வழி நடத்துகின்றனர். இந்த நடிப்பு  இன்றைய உலகையே ஆட்சி செய்து கொண்டுள்ளது என்றால் மிகை இல்லை. நான். சொல்ல எழுத நினைப்பது கலைத் துறை பற்றி அல்ல இப்ப எதுக்கு லூசு போல இதை சொல்ல வேண்டும்? வரேன் வரேன் . 


இந்த நடிப்பு தான் முக்கிய இடத்தை பிடிக்கிறது வாழ்வில், என்றால் குடும்பங்களில் , வேலைத் தளங்களில், பணியகத்தில் , அரசியல், நட்பு , உறவுகள் என இத்யாதிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.நடிப்பு என்று வந்து விட்டால் உற்று கவனித்தல், அப்படியே அச்சு பிசகாமல் அதே பாணியில் செய்வது,  அவதானிப்பு, கிரகித்தல் , சிலருக்கு இயற்கையாகவே கூட அந்த கொடை உண்டு.


உண்மையான நேர்மையான முறையில் உங்கள் கடமை தவறாமல் சிறப்பாக செய்தால் எந்த  பணியகத்தில் நீங்கள் கவனிக்க படுவது இல்லை. அங்கே வேலை செய்தாலும் செய்யவில்லை என்றால் கூட நடிக்க தெரிந்து இருக்க வேண்டும்.இருக்கும்  குறையை பூசி மெழுகி முகஸ்துதி செய்ய தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் செய்யாத வேலையை , பணியை கூட நீங்கள் செய்ததாக பாவலா பண்ண தெரிய வேண்டும்.குறிப்பாக பணியகத்தில் நீங்கள் மிகுந்த கவனம் அக்கறை  கொண்டவர் போல காட்டிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மேல் அதிகாரிகள் , உரிமையாளர்கள் முன்னிலையில். அப்போது தான் உங்கள் மீதும் உங்கள் பணி மீதும் நம்பிக்கை கொள்வார்கள், அல்லது  அப்படிக் காட்டிக் கொள்வார்கள். நீங்களே இவ்வளவு efforts போடும் அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்த எவ்வளவு முயற்சி போடுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.


இது பணியகங்களில் மட்டும் அல்ல குடும்பங்களிலும், வெற்றி கரமாக பல ஆண்கள் செய்வதை பார்த்து இருக்கிறேன். அந்த நடிப்பு என்ற கலையை மிக திறமையாக கையாளுகிறார்கள்.  மனைவியை தாஜா  பண்ணி , இல்லாததை இருப்பதாக சொல்லி, அவர்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் அது வேற கதை, உற்றார் உறவினர் முன்பும் நல்லவர் என்று பெயர் எடுக்க நடித்து தள்ளுகிறார்கள். மனிதன் என்பவன் நடிகனாக இருந்தால் தான் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணி விடுகிறார்கள். 


நான் நானாக இருக்கும் பட்சத்தில் என் வேலையை மட்டுமே கண்ணும் கருத்துமாக எவ்வளவு திறமையாக செய்தாலும் அது கண்டு கொள்ள படுவது இல்லையா, அல்லது கண்டும் காணாமலும் விட படுகிறதா ? தங்கள் தேவை கருதி அந்த நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க படுகிறதா என்று தெரியவில்லை.


உலகமே ஒரு நாடக மேடை நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் நடிக்க தெரியாதவர்கள் வாழ லாயக்கு அற்றவர்களா ?எழுத்தாக்கம் - பாமா 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.