இளைஞன் மீது சரமாரியான தாக்குதல்!!

 


கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட  மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அப் பகுதியில்,  இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இருவரையும் யுவதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த இளைஞர் மீது யுவதியின் உறவினர்  தாக்குதல் மேற்கொண்டு , பின்னர் வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின் போது,  17 வயதுடைய  யுவதியும் 18 வயதுடைய இளைஞரும் காதலர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,  இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்த  அவரின் உறவினர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய,  யுவதியின் தாய், தந்தை, மற்றும் உறவினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.