செல்வ நிலையை அடையவுள்ள ராசியினர்!!

 


வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 30 முதல் 36 நாட்கள் வரை இருக்கும்.

இதனால் ஒவ்வொரு மாதமும் சுக்கிரன் ராசியை மாற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இவர் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மே 30 ஆம் தேதி இரவு 07.39 மணிக்கு சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைகிறார்.

சுக்கிரன் கடக ராசியில் நுழைவதால் தன ராஜயோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி சுக்கிரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் இருக்கும் போது அல்லது ஜாதகத்தில் துலாம் மற்றும் மீன ராசியில் இருக்கும் போது தன ராஜயோகம் உருவாகிறது.


மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இதுவரை குழப்பம் நிறைந்த மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவார். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும்.

இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் உறவுகள் இனிமையாக இருக்கும்.


மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நிதி ரீதியாக இக்காலத்தில் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கவுள்ளது. பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடனான உறவு மேம்படும். முக்கியமாக காதல் உறவுகளில் நெருக்கமும், பிணைப்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும்.


மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமான தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் நெருக்கமும், காதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இதுவரை பிரச்சனை இருந்தால், இனிமேல் உங்கள் உறவு வலுவாகும்.

கடக ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் இருப்பதால், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.