சாதாரண தரப் பரீட்சையில் அமுல்படுத்தப்படவுள்ள கடுமையான திட்டங்கள்!!

 


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதற்கு கடுமையான திட்டங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளி தரப்பினர் பரீட்சை வளாகத்திற்குள் பிரவேசிக்க முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், பரீட்சைக்குச் சம்பந்தமில்லாத எந்த ஆவணங்களையும் விநியோகிப்பது பிரதானமாக தடைசெய்யப்பட்டுள்ளது.


பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து பரீட்சை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.