முள்ளிவாய்க்கால் நினைவு நாள்...!!

 




முள்ளிவாய்க்கால் ....

தமிழர் தம்.வேட்கை  

மூச்சடங்கிய.

காயல் நிலம்.

குருதி கொப்பளித்த 

மணல் படுக்கை. 

நிலமற்ற நிர்வாணிகளாய்

தமிழ் மக்கள் 

வேரறுக்கப்பட்ட நிலம்.

ஒரு ஆக்கிரமிப்பின்

அதி உச்ச துயர் ..

முள்ளிவாய்க்காலின்

கடைசி நொடி.

வாழ்வாங்ஙு வாழ்ந்த இனம் 

வாழ்வு தொலைத்த இடம்.


இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின்  பதின்நான்காம் ஆண்டு நினைவு தினம்.  உயிர்ப்பூக்களை உருக்குலைநத  இந்த நாளினை நினைவு கொள்வதென்பது  வரலாற்றின் கடமையாகும். 


2009 இல் நடந்த இந்த துயர் , நந்திக்கடலின் அலைகளோடும்  முள்ளிவாய்க்கால் காற்றோடும் கலந்திருக்கிறது.  

மக்கள் வாழ்வுக் குத்தவித்த அந்த நாட்கள் மிக அபாயகரமானவை. குறுநிலப்பரப்பிற்குள் குவிக்கப்பட்ட மக்கள் கொத்துக் குண்டுகளால் வதைக்கப்பட.அவலம் வார்த்தைகள் அற்றது. 

தீராத துயரத்தின் மாறாத வடுவாகி நிற்கிறது முள்ளிவாய்க்கால்.   

நந்திக்கடலின் ஓலம் என்பது மறக்கமுடியாத ஒரு மாபெரும் கறை.  சூரியக் குடும்பம் ஒளியிழந்த நொடி.ன்பது, கொடுத்துயரின்  உச்சம். 

இந்த வலி வற்றிப்போகாது இன்னும் நீறு பூத்த நெருப்பாக.தகித்துக்கிடக்கிறது.  காலம் பதில் தரும்,  சர்வதேசம் தீர்வு சொல்லும் என்ற நம்பிக்கையோடு ஈரேழு ஆண்டுகளைக் கடந்தாயிற்று. 


 1. இடப்பெயர்வின் அவல மனநிலை


2. கஞ்சியின்   மகிமை


3. எறிகணை வீச்சும் அங்கவீனமும்.


4. சரணடைதலும் மக்களும் 


5. அன்றும் இன்றுமான மரணங்கள் 


6. 2009 க்கு முற்பட்ட , பிற்பட்ட வாழ்வியல் நிலை.


7. முள்ளிவாய்க்கால்  அழிவும் சிறுவர்களின்  அவலமும்


8. இனப்படுகொலை தந்த பரிசு ஏராளமான விதவைகள்


9. முள்ளிவாய்க்காலுடன் முடிந்ததா தமிழரின் வீச்சும் மூச்சும்.


போன்ற கருத்துகள் ஆராயத் தக்கவையாகவே இன்றும் உள்ளன. கருத்துக்கள் வீரியமானவை.  அவை மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டித்திறந்தால் இன்னும் வலிமை கொள்ளும்.   


கோபிகை. 









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.