கைதடி நுணாவில் சனசமூக நிலைய திறப்பு விழா!!

 


கைதடி நுணாவில் சனசமூக  நிலையமானது,  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 28.05.2023 ) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

கைதடி - நுணாவில் சனசமூக நிலைய தலைவர் கு. சிவகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவரும் முன்னாள் கிராம சேவையாளருமான நிரு. வி. சு. துரைராசா  பிரதம விருந்தினராகவும்  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.  செல்வராணி ஜெகதீசன் , நுணாவில் -  கைதடி கிராம அலுவலர் திரு. சி.  திசாந்தன்  முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் , சமாதான நீதவானுமாகிய  திரு. அ. மதன்ராஜ் , ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகவும் 


வரணி மகா வித்தியாலய அதிபர் திரு. ஆ. தங்கவேல் ,.  கைதடி - நுணாவில் அ. த.க. பாடசாலை அதிபர்  திருமதி. சியாமளா கணராஜன், மேக்கன்ரைல் பாதுகாப்பு சபை பணிப்பாளர் - திரு. வி. சுகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்..

சமூக ஆர்வலர்கள்,  நலன் விரும்பிகள்,  பொது மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.