புதுமாப்பிள்ளையான நபர்; மணக்கோலத்தில் கைது!!

 


தமிழகத்தில் கடலூரில் பொலிசார் திருமண கோலத்தில் மாப்பிள்ளையை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலி கர்பமானதை அடுத்து அவரது கருவை கலைத்துவிட்டு வேறொரு பெண்னை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையே இவ்வாறு மண்கோலத்தில் கைதாகியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அதை கலைத்ததோடு, கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வைத்து ரம்யாவை திருமணம் செய்து கொண்டார் சுப்பிரமணி.

அதன் பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திடீரென நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணமும் நடக்க இருந்தது.

இதனை அறிந்த ரம்யா , பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

பொலிஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில், திருமணத்தை நிறுத்த கோரி இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

எனினும் திருவத்திபுரத்தில் இன்று நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் பொலிஸார் ஒவ்வொரு திருமணமாக சென்று அவரை தேடி வந்த நிலையில் சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து விட்டது.

இந்நிலையில் மணக்கோலத்தில் கோயிலில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியை சுற்றி வளைத்து பொலிசார் கைது செய்ததுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.