முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை !

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி


அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.


அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.