பிரான்சில் சிறிலங்கா தூதரக பகுதியில் இடம்பெற்ற ரணில் எதிர்ப்புப் போராட்டம்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் (இரண்டாவது நாள்) நேற்று (23.06.2023) வெள்ளிக்கிழமை சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் Dauphine பகுதியில் 14.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறும் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும் இளையோர்கள் பலரும் முன்னின்று குரல் எழுப்பினர்.

பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரைகளும் இடம்பெற்றன.

நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் எதிர்ப்புப் போராட்டம் நிறைவுபெற்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (22.06.2023) வியாழக்கிழமை பாரிஸ் Place de la Republique   பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.