முகங்காட்டி அது மறையும்..!!
அதிகாலை வேளையிலே
அழகாகப் பூ மலரும்
அழகான பூங்களிலே
மெதுவாகப் பனிவீழும்.
சிட்டுடுக் குருவிகளோ
சிறகடித்து வான்பறக்கும்
சிறுகூட்டுத் தேனீக்களோ
மலர் தேடித் தேன்குடிக்கும்.
சுகமான தென்றல் காற்று
சுகந்தத்தை சுமந்து வரும்
சுதியோடு குயிலினங்கள்
சுகராகம் பலபாடும்.
அயல்வீட்டு கன்றுக்குட்டி
அம்மாவென அது அழைக்கும்
முயல்குட்டி முன்பற்றையில்
முகங்காட்டி அது மறையும்.
விடிகாலை பார்க்கையிலே
விடிவெள்ளி வான் தெரியும்
வெகுதூரக் கதிரவனே
விடியலைக் கொண்டுவரும்.
தயாளன்
கருத்துகள் இல்லை