கோழி இறைச்சி கடையில் மாட்டிறைச்சி!!
ஹப்புத்தளை, பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து குறித்த கோழி இறைச்சி கடையினை சோதனைக்கு உட்படுத்திய போது கோழி இறைச்சி கடையில் இருந்து மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குறித்த கோழி இறைச்சி கடை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன் , கோழி இறைச்சி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை