பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த மான்கள்!!

 




திருகோணமலையில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு  நேற்று  (24) ஆரம்பிக்கப்பட்டது.


கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது


இதன்போது, திருகோணமலையில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


மான்களின் பாதுகாப்பு, உணவு போன்ற விடயங்களைக் கவனிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.