டெங்குப் பரவலை கட்டுப்படுத்த விரிவான வேலைத்திட்டம்!!

 


மேல் மாகாணத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக அலுவலகங்கள் வளாகங்களை சோதனை செய்வதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய திங்கட்கிழமைகளில் – தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரவெனாக்கள் சோதனைக்குட்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


செவ்வாய்க்கிழமை – தொழிற்சாலைகளும்

புதன்கிழமை – நிர்மாணங்கள் முன்னெடுக்கப்படும் வேலைத்தளங்களும்

வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும்.


வௌ்ளிக்கிழமைகளில் ஏனைய அரச நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.


சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் மேல் மாகாண உப குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.