15ம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய வழி!!

 


எதிர்வரும் 15ம் திகதி அதாவது நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இணையவழி (ஆன்லைன்) மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், விரும்பும் எவரும் குடிவரவுத் திணைக்களத்திற்கு வந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெறலாம் எனவும் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையும் வழமை போன்று இடம்பெறும் எனவும்   குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த புதிய திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை வீட்டிற்கே வரவழைக்கும் செயற்பாடு அமுலில் இருக்கும் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.