வயாவிளான் - சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா!!


வயாவிளான் - சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா, கடந்த 04/06/2023 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 


இந் நிகழ்வில் பிரதம அதிதிகள், சிறப்பு அதிதிகள் முன்னிலையில், வயவிளான் சுதந்திரபுரம் மைதானத்தில் முன்பள்ளிப் பிள்ளைகள் தமது உடல், உள திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர்.


வயவை மக்கள் திரண்டு வந்து இளையோரின் திறன்களைக் கண்டு களித்ததுடன், சிறுவர்களை வாழ்த்தியும் சென்றனர்.

19 வருடங்களின் பின்,  புலம்பெயர்ந்து வாழும் எம் கிராமத்து உறவுகளின் அனுசரணையில் மிகவும் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

திரு.ப.சிறிதரன் [ சிறி ] 

திரு.து.ஜீவன், மற்றும் 

லண்டனில் வசிக்கும் 

திரு.தி.மதன். ஆகியோருடைய உதவியும்  கிராம மக்களின் ஆதரவும் ஒன்றிணைந்ததனால் நீண்ட காலத்தின் பின்னர்  மிகச் சிறப்பாக விளையாட்டு நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.

 இந்த விளையாட்டு விழாவினைச் சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பாடசாலைச் சமூகத்தினர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




                    

                            

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.