அச்சத்தில் இலங்கை இராணுவம்!!
இலங்கை புலனாய்வுத்துறை சிஐஏ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இதன் காரணமாக இலங்கை இராணுவம் அச்சத்தில் உள்ளதாகவும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளரான கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் ரவி ஜெயவர்னவின் பின்னர் படைத்துறை, வன்முறை ரீதியாக இலங்கைக்கு வரும் சவால்களை சமாளிக்க கூடிய பின்தளத்திலிருந்து வளர்க்கப்பட்டவர் என்று கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெ.வி.பி காலத்தில் இடம்பெற்ற குழப்பங்களின் பின்னணியில் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க அன்றைய காலக்கட்டத்தில் பெரிதாக வெளியில் தென்படவில்லை எனவும், தற்போது அவர் வெளியில் தென்பட முக்கிய காரணமாக அமெரிக்காவின் அரசியல் நகர்வு காணப்படுவதாகவும் கலாநிதி அரூஸ் கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
600 பொலிஸாரின் கொலையை கருணா செய்ததாக பெங்களூரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலாவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளதுடன்,குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்காவை போன்று உண்மைகளை கண்டறிதலும், இன நல்லிணக்கப்பாடுகளும் என்ற அமைப்பின் ஊடாக இருதரப்பும் இணங்கிப்போகும் திட்டமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருணா என்பவர் தேவையான நேரத்தில் பயன்படுத்தப்பட்டமையினால் தற்போது அவரை வைத்து தமிழ் மக்களின் விடயத்தில் காய் நகர்த்தும் வேலையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் கலாநிதி அரூஸ் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை