சாதனை படைக்கவுள்ள மலையகத்து இரட்டையர்கள்!!
யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையான 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து மலையகத்தை சேர்ந்த இரட்டையர்கள் உலக சாதனை நிலைநாட்டவுள்ளனர.
பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இரட்டை சகோதர்களான இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை தமது சாதனை நடைப் பயணத்தை யாழில் இருந்து தொடரவுள்ளனர்.
இந்த சாதனை பயணத்தை மேற்கொண்டு உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதிக் கடிதம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்து சாதனை படைத்துள்ளனர் எனவும்
புத்தளத்திலிருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்தும் சாதனை படைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை