பணத்திற்கு வரிசை - வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சம்பவம்!!

 


வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06.2023) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை இடைத்தரகர்கள்L அமர்த்துவதாக கூறப்படுகின்றது.

வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த (30.05.2023) இரவு தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்றோர் என 10 நபர்களை கைது செய்திருந்தனர்.

பணத்திற்காக வரிசையில் நிற்கும்  செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மேலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று (14.06.2023) காலை  திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 5 நபர்களை பொலிஸார் கைது செய்தமையுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.