உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வினோஜ்குமார்!!
அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Ministry of Research, Innovation & Digitalization, Romania இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான உயரிய விருதுகள் பலவற்றி பெற்று தாய் நாட்டுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்த வினோஜ்குமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை