பொன்னாலை பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம்!


ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 


சுவாமிக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வு எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியில் இருந்து 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணி வரை இடம்பெறும். 


07 ஆம் திகதி காலை 8.45 மணி முதல் 10.15 மணி வரை கும்பாபிஷேகம் இடம்பெறும். கும்பாபிசேகத்தை தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிசேகம் இடம்பெறும். 


ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும். 


ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் நன்மை கருதி யாழ். – காரைநகர் இடையே போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துச் சேவைகள் எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆலயத்தினூடாக சேவையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.