சீழ்வடியும் சிந்தனை!


சுயநலப்போதை தலைக்கேறும்

தருணங்களில்

சமூகத்தின் மீதான

பார்வை குருடாகிப்

போகின்றது!


அன்பு

அறம்

இன்பம்

துன்பம்

என

எல்லா

உணர்வுகளிலும்

தன்நிலை கடந்த

தன்னைச் சுற்றியுள்ளோர்

மீதான

அக்கறையும்

அறநிலையும்

இருக்க

அற்றுப்போகின்ற

கணங்களில்

வெற்று சிந்தனைகளின் 

வெளிப்பாடுகளாய்

நட்டு விடுகின்றது

மனப்பாறையில்!


சுயநலப் போக்கில்

எப்போதும்

சீழ்வடியும்

சிந்தனைகள்

ஒட்டிக்கொள்வதால்

பலநேரங்களில்

விட்டில் பூச்சிகளாய்

விழுந்து மடிவது

தெரிந்தும்

ஒட்டிக்கொண்ட

ஒட்டடைகள்

விட்டபாடில்லை!


பின்னும்

சிலந்திகளுக்கு

பொன்னாய்

இருந்தாலும்

அதில்

வீழும் பூச்சிகளுக்கு

நீளும் வலிகளாய்

போகிறதே!


✍️தூயவன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.