அரச பேருந்தில் ஆபத்தான பொருள்!
யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இ. போ. ச. பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகநபரை பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை