மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில், அடுத்த மாதம் 6ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தினம் வரையில், மனித எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்க, பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக, நேற்று மாலை முன்தினம் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது, மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து, கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் 2.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து அவர் குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்ததார்.
பெண்களின் மேலாடை, பச்சை நிற சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை