அடக்குமுறை அரசுகளிற்கெதிரான "அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்"
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான "அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்" எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது.
இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள் அடக்கி ஆள்வதை வெறுப்பவர். கூடவே "பசுமை உலகு" என்றொரு அமைப்பிலும் பணியாற்றுகிறார்.
Berlin தீர்ப்பாயத்தில் முழுமையாக நின்று பணிபுரிந்தவர். நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் வழக்குகளில் தன்னை ஈடுபடுத்தித் தொடர்ந்தும் பணிபுரிகிறார்.
அண்மையில்; லெப்.கேணல் "தி+லி+பன் அண்ணா பற்றி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையொன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ஈழப் பெண்களின் முன்னேற்றத்தில் திலிபன் அண்ணாவின் பங்கையும், அவரால் பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள் பற்றியும், அவர் அரசியற்துறைப் பொறுப்பாளராக எங்கனம் பணியாற்றினார் என்பதையும் கட்டுரைகளாகத் தொகுத்து அனுப்பிவைத்தேன். அந்தவேளையில்தான் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் வழக்குத் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடைப்பயணம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணம் அவர்மனதில் உதித்திருந்தது.
தி*லி*பன் அண்ணாவின் வரலாறை அவர் முழுமையாக வாசித்தபிறகு, திலிபன் அண்ணா உண்ணாதிருந்து சாவடைந்த காலப்பகுதியில் தனது நடைப்பயணம் நிறைவுறுவதுபோலத் திட்டமிடக் கேட்டார். அவ்வாறே அக்காலப்பகுதியைத் திட்டமிட்டோம்.
September 02, 2023 அவரது அமைதிக்கான நடைப்பயணம் (Women's March for Peace) தொடங்குகிறது. அதுவும் திலிபன் அண்ணாவை முன்னிறுத்தி ஓர் ஒல்லாந்துப் பெண்ணாக அவர் இப்பயணத்தைத் தொடங்குகிறார்.
"உலக அமைதியின் சின்னமாக" திலிபன் அண்ணா உருவெடுத்திருக்கும் திருப்புமுனை யேர்மனியில் நிகழவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் திலிபன் அண்ணா அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. இவ்வருடத்தின் அதிசயமாக ஓர் ஒல்லாந்து நாட்டவரைக் கிளர்ந்தெழ வைத்திருக்கிறார்.
இவரது பயணத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், பகுதிநேரமாக இணைய விரும்புபவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளலாம்.
இவரது நடைப்பயணம் நிறைவுறும் நாளில்; நடைபெறவுள்ள வேறுசில விசேட நிகழ்வுகள் குறித்ததாக தகவல்கள் விரைவில் அறியத்தருவோம்.
IMRV - Bremen அமைப்பும், Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பும் இணைந்து இந்நடைப்பயணத்தை திட்டமிட்டு நடாத்துகின்றன.
கருத்துகள் இல்லை