நீரில் வந்த சா22மி சிலைகளால் பரபரப்பு!!

 


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதி ஆற்றங் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர்.

ஆற்றில் கிடைக்கப்பெற்ற விஷ்ணு , சிவலிங்கம் , மற்றும் இரண்டு நந்தி சிலைகள் என்பவற்றை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல , சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதையின் கற்சிலை குவியல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு சென்ற தொல்லியல் நிபுணர்கள் 50ற்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகளை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இநிலையில் மீட்கப்பட்ட சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை எனஆய்வினை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் ஆற்று வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா அல்லது மணலுக்குள் அடியில் இருந்த சாமி சிலைகள் மழை வெள்ளம் காரணமாக மேலே வந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்களை இடிக்கும் போது சேதம் அடைந்த சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசி சென்றார்களா. அல்லது மழை வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றன   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.