வேம்பு நமக்கு காப்பு!!

 


நம் வாழ்வியல் பாரம்பரியத்துடன் கலந்த வேப்ப மரத்தினை, அமெரிக்காவைச் சேர்ந்த W R Grace என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று வணிகம் செய்ய காத்திருந்தது.


வேப்ப மர விதைகளை பொடி செய்து, செடிகளில் தூவினாள் இயற்கை பூச்சிக் கொல்லியாக பயன்படும் என்ற, நம் பண்டைய கால இயற்கை விவசாய முறையை, தாம் கண்டறிந்தது போல காப்புரிமை பதிவு செய்ய காத்து இருந்தது அமெரிக்க நிறுவனம்.இந்தக் காப்புரிமை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால், வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் Natural pesticide /இயற்கை பூச்சிக்கொல்லிக்கு

நாம் உரிமைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

காப்புரிமையை தடுத்து நிறுத்துவதற்காக நம்மாழ்வார், வந்தனா சிவா மற்றும் குழுவினரும் 2000ஆம் வருடம் மியூனிக் நகரம் வந்தனர்.

European patent office, Munich-ல் முறையீடு செய்தனர்.

பல ஆண்டுகாலமாக பல் துலக்கவும், விளக்கேற்றவும்,மருந்தாகவும் கிருமிநாசினியாகவும், பூச்சிக் கொல்லியாகவும் நம் வாழ்வியலோடு

வேம்பு கலந்துள்ளதை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் எடுத்துரைத்தார்.


எடுத்துக்காட்டாக வேப்பங்குச்சி Toothbrush / பல் தூரிகை and Toothpaste/பற்பசை என ஒன்றில் இரண்டாக(2 in1) செயல்படுகிறது. வேப்பமரம் இந்திய மக்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என வாதிட்டார். நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்ட பிறகு, அமெரிக்காவிற்கான காப்புரிமை தடுத்து நிறுத்தப்பட்டது.வேப்பமரம் எளிய விவசாய மக்களுக்கு மீண்டும் கிடைத்தது.

நம்மாழ்வார் படைத்த சத்தமில்லா சாதனைகளில் இதுவும் ஒன்று.



நன்றி  - யதார்த்தம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.