புலம்பெயர் உறவினால் வழங்கப்பட்ட சிறந்த உதவித்திட்டம்!!

 


நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர்,   கல்லாறு பிரதேசத்தில் நடத்தப்பட்டுவரும்  இலவச கல்வி நிலையத்தின் புதிய கட்டடத்தினை கட்டுவதற்கான நிதியினை  வழங்கியிருக்கிறார். 

இவர், முகம் காட்டாது பல உதவிகளை தொடர்ச்சியாகச் செய்துவருவதுடன் பின்தங்கிய  நிலையில் வாழும் மாணவர்களின் கல்விக்கான வளர்ச்சியில் மிகவும் அக்கறைகொண்டு செயற்பட்டு வருபவர் 


இவர்,  யுத்தத்தில் தந்தையரை இழந்த இரு மாணவிகளின் கல்விச் செலவிற்கு ஏற்கனவே மாதாந்த உதவிப் பணத்தினை வழங்கிவருகிறார். 


அத்துடன் ,யுத்தத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் பெண் தலைமைத்துவக் குடும்பத்து மகள் மற்றும் பேரப்பிள்ளையோடு மிகவும்  வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார். 

காட்டுப் பிரதேசத்தை அண்டியுள்ள இவர்கள்,  வீட்டிற்கு குளாய் கிணறிருந்தும் நீரிறைக்கும் மோட்டர் இல்லாமையால் தூர இடத்திற்கே சென்று தமது தேவைகளிற்கான நீரைப் பெற்று வந்தார்கள். 

 இந்நிலையில்  இவர்.., நீரிறைக்கும் மோட்டர் ஒன்றினையும் குறித்த குடும்பத்திற்கு வழங்கி வைத்துள்ளார். 

தற்போதும் புதிய கட்டடத்திற்கான நிதியினையும்  வழங்கி வைத்து மாணவர்களிற்கு ஒரு நிரந்தர கட்டடத்தொகுதியையும் உருவாக்கித் தந்துள்ளார். 

இவரது சமூகம் மீதான அக்கறை மற்றும் உதவும் மனப்பாங்கினை பலரும் பாராட்டியுள்ளனர். 

உதவி பெற்றவர்களும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.