விசமிகளின் நாசகார வேலை!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரும் மரங்களுக்கு இனம் தெரியாத விசமிகளால் எரிப்பட்டுள்ளது.
விசமிகள் பூச்செடிகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியது.
அவர்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில் மண்ணெண்ணெய் எடுத்து இவர்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டனர்.
கமராவில் பதிவாகிய இரண்டு நபர்களும் பிரதேச மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை