குருந்தூர் மலை ஆதி சிவன் பொங்கல் விழாவில் குழப்பம்!!

 


தமிழ் மக்களின் ஆதி வழிபாட்டிடமான முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் இன்று (15)  பொங்கல் வழிபாடு நடத்த சென்றிருந்த பொதுமக்ககளை பொலிஸார், மற்றும்  அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தியதுடன்  விழாவிற்கு வந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கற்பூரத்தை சப்பாத்து காலால் அமிதித்து  அராஜகம் புரிந்துள்ளனர்.

தமிழர்களின் ஆதி வழிபாட்டிடமான குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்டு  அங்கு விகாரை ஒன்றும் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் தமிழர்களால் குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் பொங்கல் விழா ஒன்றினை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக இன்று காலை அரசியல்வாதிகள், பொதுமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி பொங்கல் விழாவிற்கான ஒழுங்குகளை செய்து கொண்டிருந்தபோது  அங்கு பெருமளவு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட குருத்தி விகாரையின் விகாரதிபதியும், சிங்கள மக்களும் அங்கு கூடி பொங்கல் விழாவுக்கு சென்று  தமிழ் மக்களை தடுத்து நிறுத்தியதுடன்  பொங்கல் விழாவை நடாத்த விடாமல் தடுத்து மலையிலிருந்து அனைவரையும் கீழே இறக்கியுள்ளனர்.

அதேவேளை முன்னதாக  பொங்கல்  விழாவுக்காக கற்பூரம் ஏற்றப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சப்பாத்து கால்களுடன் நுழைந்து கற்பூர தீபத்தை காலால்  அனைத்து உள்ளார்.

மேலும் பொங்கல் விழாவிற்காக கூடியிருந்தவர்களில் ஒருவரை பொலிஸார் தாக்கியதுடன்  குருந்தூர் மலை ஆதி சிவனுக்கு இன்று நடைபெற இருந்த பொங்கல் விழாவும்  திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளமக்கள் ஆதிசிவனுக்கு பொங்கல் வைக்க சென்ற மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.


அதேவேளை  குருந்தூர்  ஆதிசிவன் பொங்கல் விழாவில் ,  பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பா.கஜதீபன், எஸ்.பவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு இருந்தனர்.  






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.