சுற்றுலா வந்த இளம் பெண் சடலமாக மீட்பு!!
கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சுற்றுலா செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு அவரது அறையை உடைத்த பொலிஸார் அவரது உடைமைகள் சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.
பெண் விடுதி திரும்பாததால் அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (13) முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவர் திரும்பி வருவாரா என்பதைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்திடம் பொலிஸார் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13) முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை