இப்படியும் நடக்கிறது - மக்களே அவதானம்!

 


புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு வந்த மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்தவர்களுக்கு வழங்கிய கேக்கை உண்டதில் ஒரே குடும்பத்தினர் ஐவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குடும்பத்தினர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

65 வயதுடைய ஆண் மற்றும் அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், ஆணின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதய சத்திரசிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளரிடம் நட்பைக் காட்டி அவரைச் சில காலமாகத் தெரியும் எனவும் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50 000 ரூபாவை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்து 

உரிய காசோலையை வழங்குவதற்கு முன் இந்த தெரியாத நபர்கள் கொண்டு வந்த கேக்கைச் சாப்பிட்டு அதைப் படம் பிடித்து காசோலை வழங்கத்தயாராக உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

வீட்டினரும் அதற்கு சம்மதிக்கவே, அனைவருக்கும் கேக்கை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர். இருப்பினும் வீட்டு உரிமையாளர்,  சிறு துண்டு மட்டும் சாப்பிட்ட நிலையில்,  மற்றவர்கள் மயங்கி விழுவதைக்கண்டு தனது மூத்த மகளுக்கு அலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு மயக்கமடைந்துள்ளார்.

பின்னர்,  தந்தையின் தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காததால் மூத்த மகள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் அனைவரும் மயங்கி கிடந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.