வளர்மதி சனசமூக நிலையத்தின் 58வது நிறைவு விழாவின் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி!!

 


வளர்மதி சனசமூக நிலையத்தின் 58வது நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள இறுதிக் கரப்பந்தாட்ட போட்டி 23.07.2023 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.30 மணிக்கு வளர்மதி விளையாட்டு கழக தலைவர் திரு. க. அமல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக லவ்லி கிறீம் கவுஸ் உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முத்துமாரி அம்மன் மரத்தொழிலக உரிமையாளர் திரு. செ. பஞ்சலிங்கம், கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத் தலைவர் திரு. ரி. கருணாகரன்,  யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தலைவர் திரு. வ. செந்தூரான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வீரர்கள் மற்றும் வீராங்கனைமார் வரவேற்பு,  மங்கள விளக்கேற்றல், அகவணக்கம், கொடியேற்றல், வரவேற்புரை,  வீரர்கள் அறிமுகம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று, இறுதிப்போட்டிகள் ஆரம்பமாகும்.


அதனைத் தொடர்ந்து , தலைமை உரை, விருந்தினர்கள் உரை, நன்றி உரை, பரிசில் வழங்கல் என்பவற்றுடன் நிகழ்வுகள் இனிதே முடிவுறவுள்ளன. 

விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.