விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 01.08.2023 அன்று குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் பழகும் போது, மன்லுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞன் 02ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த சங்கர் சஞ்சீவன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (07-08-2023) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.
கருத்துகள் இல்லை