நீராடச் சென்ற இளைஞன் மரணம்!!
ஊவா பரணகமவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நீராடச் சென்ற போதே இவ் அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றுக்கு நீராட சென்ற போதே அவர் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை