போராட்டத்தில் இறங்கிய நோயாளர் காவுகை வண்டி சாரதிகள்!!
தென் மாகாண நோயாளர் காவுகை வண்டி சாரதிகள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விடுமுறை தினங்களில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்காமை, மேலதிக நேரங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண சுகாதார சேவைகள் நோயாளர் காவுகை வண்டி போக்குவரத்து சாரதி சேவை சங்கத்தின் செயலாளர் கே.ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5 அரச விடுமுறை நாட்கள் காணப்பட்டதாகவும் அதில் இரண்டிற்கு மாத்திரமே வேதனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளால் சுகாதார சேவைகள் நோயாளர் காவுகை வண்டி சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை