பணம் கொடுத்து சாரதி அனுமதி பத்திரம் பெற்ற நபர்!
யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்து போலியான சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் , காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதியை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி அனுமதி பத்திரம் பெற் நபர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் , முகவர் ஒருவர் ஊடாக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளார்.
தகவல் அறிந்த புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாத கால பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் 10 வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை