கண் சிகிச்சைக்காக புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு!!

 


வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழும் இளம் தாய் ஒருவர் ஏழ்மை காரணமாக கண் சிகிச்சை செய்வதற்குரிய பணத்தினை ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் இருந்தார்

இவர்,  உதவி கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக நோர்வேயை சேர்ந்த புலம்பெயர் உறவு ஒருவரும்  தமிழ் நாட்டைச் சேர்ந்த சக்திவேல் தமிழன்  என்பவரும் கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவினால்  பெண் ஒருவருமாக கண் சிகிச்சைக்கு உதவுவதற்கு முன்வந்து சிகிச்சைக்குரிய பணத்தினை வழங்கியிருக்கிறார்கள். 


இம் மூவருமே தொடர்ச்சியாக ஈழத்து உறவுகளுக்காக உதவிகளைச் செய்து வருபவர்கள். 

இவர்களின் உதவியினால் சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. ஒரு ஏழைக்குடும்பத்து சகோதரிக்கு உதவி புரிந்து அவரின் வாழ்விற்கு ஒளி ஏற்றி வைத்த,  நல்லுள்ளம்கொண்ட  மூவருக்கும்  உதவியினைப் பெற்றுக்கொண்டவர் நன்றி தெரிவித்துள்ளார்.. 

அத்தோடு நல்மனம் கொண்ட உறவுகளுக்கு சமூக ஆர்வலர்களும் தமது மகிழ்வையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.