பெண்ணைத் தேடிச்சென்றவருக்கு கிடைத்த பரிசு!!
நபர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்துவிட்டு அவரின் பணம் மற்றும் கைத்தொலைபேசி கொள்ளையடிக்கபட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளதுடன்,
இது தொடர்பில் பாதிக்கபட்ட நபரின் காதலி மற்றும் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் தொழில் செய்து வரும் இவர், நாட்டுக்கு வந்தபோது தன்னுடன் காதல் உறவில் உள்ள பெண் ஒருவரை சந்திப்பதற்காக மாங்குளத்திற்கு வந்துள்ளார்.
அப்போது குறித்த பெண், தனது சகோதரருடன் இணைந்து அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து,
பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
``
கருத்துகள் இல்லை