நன்மை பெறவுள்ள 3 இராசிக்காரர்கள்!!
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றும். கிரகங்களின் ராசி மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாவதுண்டு.
அப்படி உருவாகும் கிரக சேர்க்கைகளின் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன்.
இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் எதிர்வரும் (17.08.2023) ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
அதுவும் 12 மாதங்களுக்கு பின் சிம்ம ராசிக்குள் சூரியன் நுழைகிறார்.
இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பயணித்து வருகிறார்.
இதனால் சிம்ம ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது.
இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது நற்பலனை வழங்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
1.சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இச்சேர்க்கை காலமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
முக்கியமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறும். திடீரென்று கையில் பணம் அதிகம் சேரும்.
பேச்சால் பல முக்கிய காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்.
2.விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரத்தைப் பெறவுள்ளார்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெரிய பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
3.மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை