அமைச்சரின் அநாவசிய தலையீடு குறித்து வெளியான தகவல்!!
விமானநிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவுசெய்வதில் அமைச்சர் நிமால்சிறிபா டி சில்வா தலையிடுகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மீது நேர்முகத் தேர்விற்கு சென்றர்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்து நேற்று மாலை கொழும்பு விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.
100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் நியமிப்பதற்காக பல சுற்று நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யபடவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்க் 25 பெண் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர் மிகுதி 25 பேர் ஆண்கள் அதாவது 125 ஆண்களும் 25 பெண்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கு அமைச்சரின் தலையீடே காரணம் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உரிய விதத்தில் தெரிவுசெய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதன்காரணமாக நேற்று விமானநிலைய பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை