நல்லூரில் உள்ள திலீபன் கோயில் முன்பாக நேரில் கண்ட காட்சி!


 சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள திலீபன் கோயில் முன்பாக நேரில் கண்ட காட்சி. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தட்டி முன்பாக ஒரு உந்துருளியில் தந்தை, மகள் இருவர் வந்து இறங்கினார்கள். அவர்கள் றியோ போகப்போகிறார்கள் என்று நினைத்தபோது..


தனது மகளுக்கு அந்த தட்டியில் உள்ள விடையங்களை வாசித்து விளங்கப்படுத்தி கொண்டு வந்தார்.


அடுத்து திலீபன் தூபி முன்பாக உள்ளவை தொடர்பாக விளக்கம் கொடுத்து தூபி நேரே அந்த பிள்ளைக்கு கோயில் வணங்குவது போல கைகூப்பி வணங்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தார்.


இறுதியாக திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்ட தூபி அருகே அந்த பிள்ளையை அழைத்து வந்து அதன் நிலையை படங்களை காட்டி விளங்கப்படுத்தினார்.


அவர் வெளியேற முதல் அவரை விசாரித்தபோது அவரது மகளுக்கு பேச்சு வராது என்றும் ஆனால் அவளுக்கு எங்கள் வரலாறு சொல்லிக்கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் சொல்லி விட்டு சென்றார்.


அதன் பின்னராவது பிள்ளையை றியோ அழைத்து செல்கின்றாரா என்று பார்த்தபோது,

அருகில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் போடப்படும் பந்தலுக்கு அந்த பிள்ளையை அவர் அழைத்து செல்வதை காணமுடிந்தது.


தனது பிள்ளைக்கு பேச்சு வராது என்றாலும் தமிழர் வரலாற்று உண்மைகள் தெரிந்து இருக்கவேண்டும் என்று ஆர்வமாக சொல்லிக்கொடுத்த அந்த தந்தை போற்றுதலுக்கு உரியவர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.